search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால அவகாசம்"

    • விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும்.
    • மாணவிகளுக்கு மூவலூர் ராமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக ரூ.1000- மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் இவ்வாண்டிற்கான நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 31.8.2023 வரை கால நீட்டி ப்பு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் தருமபுரி மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் அரூரில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு சேர்க் கைக்கு முதல் கட்ட சேர்க்கை நடைபெற்றதில் தொழிற் பிரிவுகளில் மீத முள்ள காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கைக் கான கால அவகாசம் 31.7.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்ட ணங்களுடன் நேரில் வருகை புரியுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. அசல் 10-ம் வகுப்பு மார்க் சீட், அசல் டி.சி., அசல் சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, அலைபேசி எண்கள், மார்பளவு புகைப் படம் -1, மெயில் ஐடி மற்றும் விண்ணப்ப கட்ட ணம் ரூ.50- சேர்க்கை கட்ட ணம் ரூ.195- (அ) ரூ.185.

    பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750- உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும்.

    ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. மேலும் இந்நிலையத்தில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக ரூ.1000- மாதந்தோறும் வழங்கப்படுகிறது.எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இதுவரை விண்ணப்பிக்காத வர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து தொழிற் பிரிவு கிடைக்க பெறாத வர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப் பித்து பயனடையலாம். விண்ணப்பங்களை இல வசமாக பதிவேற்றம் செய்ய தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம்.

    மேலும் விபரங்களுக்கு 94458-03042, 93617-45995, 98949-30508 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆதாருடன் பான்கார்டு எண்ணை இணைக்க இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
    • இதனால் பலர் ஆர்வமுடன் கணினி வாயிலாக இணைத்து வருகின்றனர்.

    சேலம்:

    வருமான வரி ஏய்ப்பை தடுப்பதற்காக ஆதாருடன் பான்கார்டு எனப்படும் நிரந்தர வருமான வரிக்கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக இன்று (30-ந்தேதி) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

    1000 ரூபாய் அபராதமாக செலுத்தி இந்த தேதிக்குள் ஆதார்-பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் நாளை முதல் செயலற்றதாகிவிடும். ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு டி.டி.எஸ். பிடித்தம், மற்றும் செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்படும்.

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரித்துறையில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் வட்டி ரத்து செய்யப்படும்.

    ஆதார்- பான் இணைக்க விரும்புவோர் மற்றும் தங்களின் இணைப்பு நிலவரத்தை தெரிந்து கொள்ள விரும்புவோர் மத்திய அரசின் வருமான வரித்துறை இணைய தளத்தை பயன்படுத்துமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று கடைசி நாள் என்பதால் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பான்கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் ஆர்வமுடன் கணினி வாயிலாக இணைத்து வருகின்றனர்.

    • வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
    • இப்படிப்புகளில் சேர சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத் துடன் விண்ணப்பித்தனர்.

    சேலம், ஜூன்.12-

    தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இப்படிப்புகளில் சேர சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத் துடன் விண்ணப்பித்தனர். மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி கடந்த 9-ந்தேதி வரை எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள், பொதுமக்கள் பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ெதாடர்ந்து வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 1-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
    • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://dtcponline.tn.gov.in/eduins/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பெரம்பலூர் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் அமையும்திட்ட மில்லாப்பகுதிகளில் 1.1.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்விநிறுவன கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடந்த 2022 ஜூன் மாதம் 24ம்தேதி முதல் டிசம்பர் மாதம் 31ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.இந்நிலையில் மேலும் ஒரு வாய்ப்பாக அனுமதியற்ற கட்டடங்களுக்கு அனுமதி பெற வரும் ஜூன் மாதம் 30ம்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://dtcponline.tn.gov.in/eduins/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இவை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை தவறாது பயன்படுத்தி க்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.


    • தென்காசி மாவட்ட பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் மாணவர்கள் உதவி தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இது வரையில் விண்ணப்பிக்காத சிறுபான்மையின மாணவர்கள் கால அவகாசத்தை பயன்படுத்தி வருகிற 15-ந் தேதிக்குள் தவறாமல் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 15- ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    எனவே இது வரையில் விண்ணப்பிக்காத சிறுபான்மை யின மாணவ, மாணவிகள் கால அவகாசத்தை பயன்படுத்தி வருகிற 15-ந் தேதிக்குள் தவறாமல் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • சி.எஸ். ஐ.ஆர். நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த 10-ந்தேதியுடன் முடிவடைந்தது.
    • விண்ணப்பத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால், அதனை திருத்திக்கொள்ள வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கி உள்ளது.

    சேலம்:

    இந்திய அரசின் சி.எஸ். ஐ.ஆர். நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த 10-ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் முதுநிலை பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்றும், அவர்களின் நலன் கருதியும் நெட் தேர்வுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதியை நீட்டிப்பு செய்து, இந்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு நாளை மறுநாள் (17-ந்தேதி) கடைசி நாள் ஆகும். அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்த வருகிற 17-ந்தேதி இரவு 11.50 மணி வரை வாய்ப்பு வழங்கி உள்ளது. மேலும் விண்ணப்பத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால், அதனை திருத்திக்கொள்ள வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த தகவலை இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

    • முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர்.
    • பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர். குறிப்பாக சிவசக்தி நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால், வைப்பு தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் கால அவகாசம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனத்தின் வாசலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த நிதி நிறுவன உரிமையாளர் ரவி மற்றும் ஊழியர்களிடம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் சார்பாக தங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் வங்கியில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பணத்தை விரைந்து கொடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×